முக்கியச் செய்திகள் தமிழகம்

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

சாதி மறுப்பு திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரது மகள் வினோதினி. இவரும் பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் நிதிஷ்குமார் என்பவரும் சின்னசேலம் அருகே இருக்கக்கூடிய காட்டுக்கொட்டாய் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் பிரிவில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில் இன்று எலவனாசூர் கோட்டையில் இருக்கக்கூடிய நான்காரம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் வினோதினியின் வீட்டில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்தால், அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் எதிர்ப்பை மீறி நிதிஷ் குமாரும், வினோதினியும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் தாங்கள் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெண்ணின் பெற்றோர் செல்போன் மூலம் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்கிடம் பாதுகாப்பு கேட்டு அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

Advertisement:

Related posts

வன்முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது; அமெரிக்க முதல் பெண் மெலனியா ட்ரம்ப் கருத்து!

Saravana

மேகதாது: கர்நாடகாவை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Gayathri Venkatesan

சட்டமன்றத்தில் சட்டையை கழற்றிய காங்கிரஸ் எம்எல்ஏ!

Saravana Kumar