ஈரோடு: தீவிரவாத தடுப்பு சட்ட பிரிவின் கீழ் ஒருவர் கைது

ஈரோட்டில் தேசிய தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளது. தேசிய தீவிரவாத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஆசிப் முஷபீன் என்பவரை…

ஈரோட்டில் தேசிய தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளது.

தேசிய தீவிரவாத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஆசிப் முஷபீன் என்பவரை கைது செய்துள்ளனர்.

இவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் என்பதும், பல முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஈரோட்டில் வசித்து வந்தார்.

மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் காவல்துறை நடத்திய 26 மணி நேரமாக விசாரணையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

முன்னதாக, இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உயிரிழப்புப் படைத் தாக்குதல் நடத்த உள்ளதாக அல் கொய்தா தீவிரவாத அமைப்பு கடந்த மாதம் மிரட்டல் விடுத்திருந்தது.

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காவல் துறை அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.