முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு: உச்ச நீதிமன்றம் விதித்த கெடு

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகள், துயரம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரித்த வழக்கில், நீதிபதி அசோக் பூஷண் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. கொரோனா பெருந்தொற்று முடியும் வரை சமூக உணவுக்கூடம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தொடர்பாக மாநில அரசுகள் திட்டம் வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை 31க்குள் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


மேலும், “புலம்பெயர் தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்ய உரிய திட்டத்தை ஜூலை 31க்குள் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப, அவர்கள் கோரும் அளவு தேவையான அனைத்து உணவு தானிய வகைகளை கொடுக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.

Advertisement:

Related posts

2வது அலையில் 3 ஆயிரம் கொரோனா இறப்புகள் மறைப்பு: மறு ஆய்வில் வெளிவந்த உண்மை!

Gayathri Venkatesan

பண மோசடி வழக்கில் தன் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டதாக ஆர்.கே. சுரேஷ் குற்றச்சாட்டு

Gayathri Venkatesan

நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!

Halley karthi