முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

யூரோ காலபந்து: பிரான்ஸ் அணியை வீழ்த்திய சுவிட்சர்லாந்து

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக்- அவுட் சுற்றில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

24 அணிகள் பங்கேற்று விளையாடிவரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் தற்போது, காலிறுதிக்கு நாக் அவுட் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணியும், குரோஷியா அணியும் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் வீரர் பெட்ரி தவறுதலாக அடித்த கோலால், குரோஷியா அணி கோல் கணக்கை தொடங்கியது. இதையடுத்து, அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் அணி அடுத்தடுத்து 3 கோல்கள் அடுத்து முன்னிலை பெற்றது. இறுதி கட்டத்தில் குரோஷியா அணி தரப்பில் 2 கோல்கள் அடிக்கப்பட்டதால், 3க்கு 3 என்ற கணக்கில் ஆட்டம் ட்ரா ஆனது.

இதையடுத்து, வெற்றியை நிர்ணயம் செய்யும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில், ஸ்பெயின் வீரர்கள் அல்வரோ மோராடா மற்றும் மிகெல் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இதன்மூலம், ஸ்பெயின் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில், பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியும், ஸ்விட்சர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், தொடக்கத்திலேயே ஸ்விட்சர்லாந்து அணி கோல் அடித்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. முதல் பாதியில் சுவிட்சர்லாந்து முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் பாதியில் அதிரடி காட்டிய பிரான்ஸ் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தது.

இதையடுத்து, சுவிட்சர்லாந்து மேலும் 2 கோல்கள் அடித்ததால் போட்டி டிரா ஆனது. தொடர்ந்து, வெற்றியை நிர்ணயம் செய்யும் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் சுவிட்சர்லாந்து அணி 5க்கு 4 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement:
SHARE

Related posts

37 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக்காகும் முந்தானை முடிச்சு படம்!

Niruban Chakkaaravarthi

கடம்பூர் ராஜுவை எதிர்த்து தினகரன் போட்டி!

Saravana Kumar

காதலால் இணையும் விஷ்ணு விஷால்- ஜுவாலா குட்டா: ஏப்ரலில் திருமணம்

Gayathri Venkatesan