ஜம்மு விமானப்படை தாக்குதல் வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு

ஜம்மு விமானப்படை நிலைய தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. ஜம்மு விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால், உயிரிழப்புகள்…

ஜம்மு விமானப்படை நிலைய தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது.

ஜம்மு விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், விமான நிலையம் பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் இரண்டு பணியாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதலுக்கு ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.