காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், இரண்டு துணை மேயர் பதவிகளை ஒதுக்கியுள்ளது திமுக.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி கட்சிகளுக்கு மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவருக்கு போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகளை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி மற்றும் சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவிகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை, தேனி, காங்கேயம், சுரண்டை, கருமத்தம்பட்டி, கோபிசெட்டிபாளயைம் நகராட்சி தலைவர் பதவிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல கூடலூர், ஆரணி, நரசிங்கபுரம், காரமடை, குடியாத்தம், திருவேற்காடு, குன்றத்தூர், தாராபுரம், உசிலம்பட்டி நகராட்சி துணை தலைவர் பதவிகள் காங்கிரசுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள ரஷ்யா: ‘ஸ்பெட்ஸ்நாஸ்’ சிறப்பு கமாண்டோக்கள்
இதேபோன்று, மங்களம்பேட்டை, சின்னசேலம், வடுகப்பட்டி, பூலாம்பட்டி, பிக்கட்டி, பேரையூர், பட்டிவீரன்பட்டி, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிகள் மற்றும் சங்கராபுரம், கீழ்குந்தா, கன்னிவாடி, நங்கவல்லி, கருப்பூர், டி.என்.பாளையம், நாட்றம்பள்ளி, உடையார்பாளையம், கணியூர் உள்ளிட்ட பேரூராட்சி துணை தலைவர் பதவிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








