பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் நடுவே குண்டுவெடித்ததில் ஒருவர் பலி!

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கவுசர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று  குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. கிரிக்கெட் போட்டியின் போது ஒரு நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பானது திட்டமிட்ட தாக்குதல் என்றும், மேம்படுத்தப்பட வெடிக்கும் சாதனம் மூலம் நடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர்  பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சர்பகாஃப் என்னும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக  குண்டுவெடிப்பு தாக்குதலில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த மாதம், ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானின் சுதந்திர தினத்தன்று கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஏழு மாவட்டங்களில் காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்துப் பணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். இதில் ஆறு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.