கூட்டணி குறித்து ஜனவரி 9 மாநாட்டில் அறிவிக்கப்படும் – விஜய பிரபாகரன்!

யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி 9ம் மாநாட்டில் தேதி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜய பிரபாகரன் மதுரையில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பேசியது,

”பல எதிர்ப்புகளை மீறி தேமுதிக கட்சி வளர்ந்துள்ளது. அதற்கு கேப்டன் விஜயகாந்த் தான் காரணம். என் அப்பாவை நான் மிஸ் பண்ணுவது போல தமிழகத்தில் ஒவ்வொருவரும் மிஸ் பண்ணுகிறார்கள். கேப்டன் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அரசிலுக்கு வந்தார். உங்கள் ஆசையை பூர்த்தி செய்ய லேடி கேப்டன் வந்துள்ளார்கள் அது தான் என் அம்மா. எல்லோரும் பிரமலதா விஜயகாந்த் அடுத்த ஜெயலலிதாவா என கேட்கின்றனர். ஆனால் எங்களுக்கு அவர் முதல் பிரேமலதா” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,

”தமிழகம் முழுவதும் இல்லம் தேடி உள்ளம் நாடி பிரச்சாரத்தின்  இரண்டாம் கட்ட பயணம் செய்து வருகிறோம். தேமுதிக எந்தக் கட்சி கூட்டணிக்கு செல்கிறதோ அந்த கட்சிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். தற்போது தேமுதிக மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம். யாருடன் நாங்கள் கூட்டணி என்பதை வரும் ஜனவரி 9ம் தேதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது அப்போது எங்கள் பொதுச் அறிவிப்பார். கேப்டன் விஜயகாந்திற்கும்  விஜய்க்கும் ஒரு நல்ல நட்பு உள்ளது. நாம் தமிழர் சீமான் அவர்கள் அன்றைய தினம் கேப்டன் ட்ரெண்டிங்கில் இருந்தபோது கேப்டனை திட்டியதால் ஓட்டு வாங்கினார். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. அண்ணன் விஜய் அவர்களை எங்களுக்கு பிடிக்கும்”

என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.