சென்னையில் மண்வாசனை அமைப்பு சார்பில், 1 மணி நேரத்தில் 214 உணவு வகைகளைத் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் மண்வாசனை அமைப்பு சார்பில், பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் சிறுதானிய வகைகளைக் கொண்டு குறுகிய நேரத்தில் அதிக உணவு வகைகளை தயாரிக்கும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 1 மணி நேரத்தில் 214 உணவு வகைகளைத் தயாரித்து சாதனை நிகழ்த்தப்பட்டது.
தமிழர்களின் பண்பாடு மற்றும் நாகரீகத்தை நினைவூட்டும் விதமாக இந்த சாதனை அமைந்தது. மேற்கத்திய உணவு போல நம்நாட்டின் உணவும் பெருமை மிகுந்த ஒன்று என்பதை மண்வாசனை அமைப்பு இச்சாதனை மூலம் நிரூபித்துள்ளது.
இந்த சாதனை முயற்சியை ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்து கவுரவித்துள்ளது. அரிசி மற்றும் சிறுதானிய வகைகளைக் கொண்டு 1 மணி நேரத்தில் செய்யும் இந்தச் சாதனைக்கு இதுவரை 130 உணவு வகைகள் இலக்காக இருந்தது குறிப்பிடத்தக்கது.










