பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரித்த NSO நிறுவனத்திற்கு எதிராக ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது
இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ (NSO Group) நிறுவனம் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருளை தயாரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முக்கியமான பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பலருடைய செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது. இந்நிலையில், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் மீது ஆப்பிள் செல்போன் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில், ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களின் வாடிக்கையாளர்களை குறிவைத்து என்எஸ்ஓ பெரும் சதியில் ஈடுபட்டதாகவும் என்எஸ்ஓ. நிறுவனம் தனது செயலிகளை, ஐ போன்களில் சட்டவிரோதமாக நிறுவுவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.