ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலத்தின் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகை அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள் என அழைக்கப்படும் ஓணம் பண்டிகையை அம்மக்கள் சாதி, மத வேறுபாடின்றி வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தனியார் அலுவலங்களிலும் ஓணம் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
கொல்லம் மாவட்ட ஆட்சியரக அரங்கத்தில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாடத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அஃப்சனா பர்வீன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் நடனமாடி அசத்தினார். ஆட்சியரின் இந்த நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/P__RamDas/status/1695046478790848685?s=20







