திருப்பூர் அரசு பள்ளியில் புகுந்த சாதிய தீ! பட்டியலினப் பெண் சமைக்க எதிர்ப்பு!

அவிநாசி அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பட்டியலினப் பெண் சமைத்த காலை உணவை சாப்பிட தங்கள் குழந்தைகளை ஒருதரப்பினர் தடுத்ததாக புகார் எழுந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை, காலை உணவு திட்டத்தை…

அவிநாசி அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பட்டியலினப் பெண் சமைத்த காலை உணவை சாப்பிட தங்கள் குழந்தைகளை ஒருதரப்பினர் தடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை, காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், காளிங்கராயன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பட்டியலினத்தைச் சேர்ந்த தீபா, உணவு சமைத்துப் பரிமாறியுள்ளார்.

இதனை அறிந்த ஒருதரப்பினர் தங்கள் குழந்தைகளை சாப்பிட விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், மாற்றுச் சான்றிதழைத் தருமாறும் பள்ளி நிர்வாகத்திடம் அவர்கள் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுபோன்று நடைபெறாது என்றும், பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வள்ளிபுரம் ஊராட்சித் தலைவர் முருகேசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.