தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், குரோம்பேட்டை, தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







