திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளுவர் திருநாளையொட்டி அவரின் சிலைக்கு மரியாதை செலுத்தி, தமிழ்நாடு அரசின் விருதுகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தை 2ஆம் நாள் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு அரசின்…

திருவள்ளுவர் திருநாளையொட்டி அவரின் சிலைக்கு மரியாதை செலுத்தி, தமிழ்நாடு அரசின் விருதுகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

தை 2ஆம் நாள் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி, தா.மோ.அன்பரசன், மா சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து 2022ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமி, 2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது பெருந்தலைவர் காமராசர் விருது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி, ஆகியோருக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், பாவேந்தர் பாரதிதாசன் விருது வாலாஜா வல்லவன் வி.க. விருது நாமக்கல் திரு.பொ. வேல்சாமி, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர்மு.மேத்தா, தந்தை பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றன், அண்ணல் அம்பேத்கர் விருது எஸ்.வி. ராஜதுரை மற்றும் தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா. மதிவாணன் ஆகியோருக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.


கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வள்ளலாரின் 200 ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற, கைவிடப்பட்ட காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு ரூ 20 கோடி ஒதுக்கீட்டில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு முதல் தவணை நிதியுதவியாக ரூ 88 இலட்சத்து 5 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.