காரல் மார்கஸின் 205-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் புறாக்களை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினர்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவரான காரல் மார்க்ஸின் 205-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பனியன் ஃபேக்டரி லேபர் யூனியன் சங்க அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர், காரல் மார்க்ஸ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவியும் மற்றும் தொழிலாளர் ஒற்றுமை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டு புறாக்களை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினர்.
—-அனகா காளமேகன்







