சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!

மதுரை மாவட்டம், சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, தினமும் ஒவ்வொரு நிகழ்வுகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி…

மதுரை மாவட்டம், சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, தினமும் ஒவ்வொரு நிகழ்வுகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதானத்தில் தெளித்தனர்.

பின்னர் பூ வளர்த்து , அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி மண்டகப்படியில்
வந்து சேர்ந்தது. அங்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றுது. தொடர்ந்து,
அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர்,
பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், சோழவந்தான் மற்றும் அதன்
சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, அம்மன் சங்கங்கோட்டை கிராமம் மற்றும் முதலியார் கோட்டை
கிராமம் வழியாக, மார்க்கெட் ரோடு மற்றும் நான்குரத வீதி வழியாக கோவிலை
வந்தடைந்தது. மேலும், சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை
செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு
ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

—- கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.