முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மருத்துவர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்கள் சார்பில் நன்றி: பிரதமர் மோடி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேவையாற்றிய மருத்துவர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்களின் சார்பாக நன்றி கூறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களின் அறிவும், அனுபவமுமே நமக்கு பேருதவியாக அமைந்ததாகத் தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், நாடு முழுவதும் சுகாதாரத்துறைக்கான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், கொரோனா பேரிடரை கையாள்வதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதாகக் கூறிய பிரதமர் மோடி, பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

விவேக்கின் இறுதிச் சடங்கிற்கு காவல்துறை மரியாதை!

Gayathri Venkatesan

மகளிர் தினத்தில் பிங்க் நிறத்திற்கு மாறிய ரயில் நிலையங்கள்!

Jeba Arul Robinson

பள்ளி மாணவியிடம் ஆபாச படம் கேட்டு மிரட்டியதாக இளைஞர் கைது

Jeba Arul Robinson