ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதித்த நிலையில், 3 பேர் குணமடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
அனைவரும் தடுப்பூசி செலுத்துவது, வெளிநாட்டு பயணிகளை கண்காணிப்பது, பண்டிகை கால கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், இரவு நேர ஊரடங்கு அமுல் படுத்துவது குறித்தும் முதலமைச்சர் ஆலோசித்ததாக தெரிகிறது.








