ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஆக உயர்வு

நாட்டில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், அதன் புதிய வகையான ஒமிக்ரான் வைரஸ் தற்போது ஆட்டுவிக்கத்…

நாட்டில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், அதன் புதிய வகையான ஒமிக்ரான் வைரஸ் தற்போது ஆட்டுவிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா 3வது அலை ஜனவரி மாதம் ஏற்படலாம் எனவும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தலா 54 பேரும், தெலங்கானாவில் 20 பேரும், கர்நாடகாவில் 19 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தானில் 18 பேரும், கேரளாவில் 15 பேரும், குஜராத்தில் 14 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆந்திரா, சண்டிகர், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 28 பேர் குணமடைந்துள்ளதாகவும், டெல்லியில் 54 பேரில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.