டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி முனேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கின் இன்றைய போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற பி.வி.சிந்து,…

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கின் இன்றைய போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற பி.வி.சிந்து, பிரவீன் ஜாதவ், பூஜா ராணி, உள்ளிட்டோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து, பெண்களுக்கான வில்வித்தை போட்டி இன்று மதியம் தொடங்கி நடைபெற்றது. இதில், இந்தியாவின் தீபிகா குமாரி, கலந்துகொண்டார். முதலில் நடைபெற்ற போட்டியில், பூடான் வீராங்கனையை 6 – 0 என்ற கணக்கில் தோற்கடித்த தீபிகா குமாரி, அடுத்து நடைபெற்ற போட்டியில், அமெரிக்க வீராங்கனை ஜெனிபரை 6 – 4 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபிகா குமாரி தகுதி பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.