டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், இந்தியாவின் பிரவீன் ஜாதவ், ரஷ்யாவைச் சேர்ந்த கால்சனை 6 – 0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜீரியாவின் இச்ரக்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி, 5 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதனையடுத்து வரும் 31-ம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் பூஜா ராணி, சீனாவின் லீ கீனை எதிர்கொள்கிறார்.