இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தும், உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜூலை 28- ஆம் தேதி உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகிறது. இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இதற்காகவே 1948 ஆம் ஆண்டு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது.
எதிர்கால தலைமுறைக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க இச்சங்கம் முயல்கிறது. உலகம் முழுவதும் தாவரம், விலங்கினம் என உயிர்கள் பலவகைப்படுகின்றன. நீர், நிலம், காற்று, ஆகாயம் என அனைத்தும் மாசுக்களால் நிறைந்திருக்கின்றன. மாசற்ற, சுகாதாரமான உலகமைய பாடுபட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நீர் வளத்தையும், நில வளத்தையும் பாதுகாக்க முயல்வோம். இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்.







