அரசு பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விச் சீர் வழங்கும் விழாவில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அந்த பள்ளிக்கு வழங்கியுள்ளனர்.
தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாழையாத்துபட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் சுதந்திர நாளான நேற்று நூற்றாண்டு விழா, சுதந்திர தின விழா, கல்விச்சீர் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேளதாளங்கள் முழங்க கல்விசீர்
அதில் பேரூராட்சி தலைவர், ஊராட்சி தலைவர், ஊர் பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பிறகு அப்பள்ளியின் முன்னால் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் தாங்களாகவே முன் வந்து பள்ளிக்கு தேவையான
கல்வி உபகரணங்களான தொலைகாட்சி, பீரோ, மின்விசிறி, டேபிள், நாற்காலி, பிரிண்டர், பைகள், தட்டு, டம்ளர்கள், எழுதுபொருட்கள், நோட்டுகள், தண்ணீர் குடம், குக்கர், குப்பை தொட்டி
உள்ளிட்ட 5லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏராளமான பொருட்களை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கினர். கல்விச்சீர் பெற்றுக்கொண்ட ஆசிரியர்களும், மாணவர்களும் ஊர்பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து கல்வீச்சீர் வழங்கிய முன்னாள் மாணவர்கள் கூறியது: தற்போது எங்கள் பள்ளியில் அதிக மாணவ மாணவிகள் பயின்று வருவதால் அரசு தொடக்கப் பள்ளியாக செயல்பட்டு வரும் பள்ளியை அரசு நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும், நாங்கள் கல்விச்சீர் வழங்கியது போல் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அனைத்து பள்ளிகளிலும் கல்விச்சீர் வழங்க வேண்டும் என்றும் இதன்மூலம் அரசு பள்ளிகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினர்.