முக்கியச் செய்திகள் குற்றம்

சிக்கன் பக்கோடா வாங்கித் தருவதாகக் கூறி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை – முதியவர் கைது

சிக்கன் பக்கோடா வாங்கித் தருவதாகக் கூறி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள செட்டி திருக்கோணம் பகுதியைச்
சேர்ந்தவர் சேப்பெருமாள் என்கிற ராஜமாணிக்கம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த
மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் பரிவாக பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில்,
வீட்டில் பெற்றோர்கள் யாரும் இல்லாதபோது அப்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்த ராஜமாணிக்கம், என்னுடன் வா சிக்கன் பக்கோடா வாங்கித் தரேன் இருவரும் சாப்பிடலாம் எனக் கூறி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இதைத்தொடர்ந்து, சில மாதங்களாக பெண்ணின் வயிறு பெரிதாகி உள்ளதைக் கண்ட
பெற்றோர்கள் பெண்ணுக்கு மண்ணை அள்ளி தின்றும் பழக்கம் உள்ளதால் வயிறு பெருசாகி இருக்கும் என்று எண்ணியிருந்தனர். அதன் பிறகு ஒரு நாள் ராஜமாணிக்கத்துடன் அப்பெண் அடிக்கடி செல்வதைக் கண்ட சிலர் பெண்ணின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதில், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அப்பெண்ணிடம் விசாரித்தபோது, சிக்கன் பக்கோடா வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் நடந்ததைக் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அப்பெண் ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பெண்ணின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப் பதிந்து ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சைவப் பிரியர்களை பார்த்தால் பாவமாக தெரியும்; பழைய நினைவுகளை பகிர்ந்த ரஜினிகாந்த்

Web Editor

முகக்கவசம் அணிவதற்கு எதிராக வழக்கு; நீதிமன்றம் அதிரடி

EZHILARASAN D

முன்னறிவிப்பின்றி வீடுகள் இடிப்பு; விரைவில் வீடுகள் ஒதுக்கி தர கோரிக்கை

EZHILARASAN D