உலகிலேயே 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்திய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு, சர்வதேச உயரிய விருது (TX 2).
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2013-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 30 புலிகள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் புலிகளை பாதுகாப்பதற்கு கன்சர்வேஷன் அண்டு டைகர் உள்ளிட்ட 13 அமைப்புகள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன.
அண்மைச் செய்தி: விரைவில் வெளியாகும் ஓலா இ-கார்?
இவ்வமைப்பு, பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்திய நாடுகளுக்கு TX 2 எனும் உயரிய விருதை வழங்கி வருகின்றது. அதன்படி, சர்வதேச அளவில் 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தியதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு, TX 2 விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது காணொளி மூலம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/news7tamil/status/1486626453504491521
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு, சர்வதேச உயரிய விருதான TX 2 விருது அறிவிக்கப்படுள்ளமைக்கு, சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








