முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓலா ஆட்டோ, கார் கட்டணம் உயர்வு: பயணிகள் அவதி

ஓலா நிறுவனத்தின் ஆட்டோ மற்றும் கார் சேவைகளுக்கான அறிவிக்கப்படாத கட்டண உயர்வால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஓலா ஆட்டோ மற்றும் கார்களை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஓலா ஆட்டோவிற்கான கட்டணம் 2.5 கி.மீ. தூரம் வரை குறைந்தபட்சமாக ரூ. 55 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தக் கட்டணம் ரூ. 110 முதல் ரூ .130 வரை வசூலிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி பயண தூரத்திற்கு ஏற்ப ரூ.20 – 50 வரை கூடுதல் கட்டணத்தையும் கேட்கிறார்கள் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஓலா கார், ஆட்டோக்களில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அன்றாட பணிகள் மற்றும் அவசர தேவைகளுக்கு ஓலா ஆட்டோ, கார்களை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பீக் ஹவர்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஓலா ஆட்டோ, கார் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைகள் தேவையற்றவை”

Janani

நாட்டில் சாமிக்காக கட்சி இருக்கு பூமிக்காக கட்சி இல்லை – சீமான்

Gayathri Venkatesan

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ், இபிஎஸ் பதில் அளிக்க உத்தரவு

Web Editor