வன்முறையை தூண்டும் திமுக அரசின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை- மத்தியமைச்சர்

வன்முறையை தூண்டும் வகையில் திமுக அரசு செய்யும் காரியங்கள் கண்டிக்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய இணை…

வன்முறையை தூண்டும் வகையில் திமுக அரசு செய்யும் காரியங்கள் கண்டிக்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான சுற்றுசுழலுக்கு பாதுகாப்பான பொருட்காட்சியை தொடங்கி வைக்க வந்துள்ளேன். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதற்கான கடைகள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன என்றார். பாஜகவினர் இன்று எனக்கு அளித்த வரவேற்பின் மூலமும் தமிழக பாஜக தொண்டர்கள் மத்தியில் உள்ள எழுச்சியால் நிச்சயம் வரும் 2024 ஆம் தேர்தலில் தமிழக பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வார்கள் என கூறினார்.

என்ஐஏ நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற பயங்கரவாதம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை சோதனை செய்து கைது செய்துள்ளார்கள். பயங்கரவாதம் தான் நாட்டை பிளவுபடுத்தும் பணியாக இருக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு இளைஞர்களை ஸ்லீப்பர் செல்ஸ் ஆக மாற்றும் அமைப்பாக இருக்கிறது என குற்றம் சாட்டினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் இன்றும் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறார்கள். திமுக அரசு வன்முறையையும், தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கும் விதத்தில் செய்யும் காரியங்கள் கண்டிக்கத்தக்கவை என்றார்.

மேலும் பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்திற்கு எல்லா விதமான சூழலையும் ஏற்படுத்தி தருகிறார். பாஜக ஆர் எஸ் எஸ் சித்தாந்த ரீதியாக நாட்டு முன்னேற்றத்திற்காக இருக்கும் அமைப்பு. ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பயங்கரவாத அமைப்பு என்றும் வருகின்ற தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள் பாடத்தை புகட்டுவார்கள் என்றார்.

பாரத் சோடா யாத்திரை செல்லும் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் முதலில் ஒருங்கிணைப்பாக இருக்க வேண்டும். கட்சிக்கு முதலில் ஒரு தலைவரை அவர்களால் உருவாக்க முடியவில்லை என விமர்சித்தார்.

2014 ஆம் ஆண்டு முதல் மோடி ஆட்சியில் எந்த ஒரு ஊழலும் இல்லை. நாட்டில் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கும் முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது என்றும் தமிழகத்தில் ரேசன் கடைகளில் பிரதமர் படம் வைக்கப்படவில்லை என்றாலும் எங்களுக்கு கவலை இல்லை , ஏனென்றால் மக்கள் மனதில் பிரதமர் இடம்பெற்றுள்ளார். ஆனால் ரேசன் கடைகளுக்கு மத்திய அரசும் மானியம் வழங்குவதால் முறைப்படி பிரதமர் படம் அங்கு வைக்கப்பட வேண்டும் என்றார்.

செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து சென்னை தி.நகர் பாண்டி பஜார் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் ஆய்வு மேற்கொண்டார். ரேஷன் பொருட்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த மத்திய இணை அமைச்சர், மத்திய அரசு சார்பில் மானியங்கள் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் முறையாக மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.