காவிரி எல்லையில் கனமழை – ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9000 கன அடியாக உயர்வு!

காவிரி எல்லை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9000 கன அடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக 300 கன அடி…

காவிரி எல்லை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக 300 கன அடி முதல் 200 கனஅடி வரை என நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. நீர்வரத்து குறைவு காரணமாக ஆற்றில் ஆங்காங்கு சிறு சிறு குட்டைகளில் தண்ணீர் தேங்கி காட்சியளித்தது.

இதையும் படியுங்கள் : போர்களின் கோர முகத்தை எடுத்துரைத்த புகைப்படங்கள் வரிசையில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்த புகைப்படம்…!

இதையடுத்து, காவிரி எல்லை பகுதிகளில் திடீரென நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 200 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது வினாடிக்கு 9000 கன அடியாக அதிகரித்துள்ளது. திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கமாக கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டாலோ அல்லது கர்நாடக பகுதிகளில் மழை பெய்தாலோ நீர்வரத்து அதிகரிக்கும். இந்நிலையில், திடீரென நீர்வரத்து 9000 கன அடியாக உயர்ந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.