கோவையில் நடந்த திருமண விருந்தில் ராஜபோக விருந்து வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி ஆகும். இதனை அவரவர் வசதிக்கேற்ப செலவுகள் செய்து நடத்துவது வழக்கம். முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து நட்சத்திர விடுதி, கடற்கரை ரிசார்ட், அரங்கங்களில் பிரமாண்டமான முறையில் திருமண விழாக்கள் நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிக்கவும்: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இப்போது உள்ள காலகட்டத்தில் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்துவது டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதன்படி சிலர் வித்தியாசமான முறையில், விமானத்தில் வைத்து திருமணம் செய்வது, ஜேசிபி எந்திரத்தில் திருமண ஊர்வலம், ஊரே திரண்டு சீர்வரிசை கொடுத்தல் இப்படி பல திருமணங்கள் பேசு பொருளாகி உள்ளன.
ஓ….. இது தான் ராஜ விருந்தா?மேலும், தற்போது புதுமண ஜோடிகள் கடலுக்கு அடியில் தண்ணீரில் திருமணம் செய்வது புதிய டிரெண்டாகி வருகிறது. ஸ்கூபா டைவிங், பாராசூட் திருமணம் என வாழ்வில் மறக்க முடியாதபடி பிரம்மாண்டமாக தங்களது திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது கோவையில் நடந்த ஒரு திருமணத்தில் ராஜபோக விருந்து அளிக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசர் காலங்களில் பயன்படுத்தியது போன்ற பொருட்கள் திருமண விருந்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விருந்தில் இலைக்கு பதிலாக அழகிய மயில்வடிவத்திலான பிரம்மாண்ட தட்டில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. ராஜபோக விருந்து என்றால் இப்படிதான் இருக்குமோ என நெட்டிசன்கள் பலரும் கூறிவருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.







