முக்கியச் செய்திகள் தமிழகம்

விவசாயிகள் விரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்படுவார்கள்-கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன்

விவசாயிகள் விரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்படுவார்கள் என தமிழக
கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கச்சனத்தில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியை
ஆய்வு செய்த பின்னர், கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆண்டு அதிக அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு சில தினங்களில் அதிகளவில் அறுவடை செய்யப்படும் குறுவை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பிறகும் நாட்டில் திறந்த வெளி குடோன்கள்
உள்ளன. தமிழகத்தில் மூடிய குடோன்கள் இருப்பினும், அதிக அளவில் திறந்த வெளி
குடோன்கள் உள்ளன. தமிழக முதல்வர் ரூ. 238 கோடி மதிப்பில் மூடிய குடோன்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகள் விரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்படுவார்கள். விவசாயிகளின்
கருத்துக்கள் முழுமையாக கேட்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பதை மறுக்க முடியாது. முதல்வரின்
வழிகாட்டுதலின்படி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைப்படுகளை சரி
செய்யவும், புகார்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தி நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1 கோடியே 22 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதில், 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
செய்யப்பட்டுள்ளது என்றார் ராதாகிருஷ்ணன்.

தொடர்ந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.ஆர்.
பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்த ஆண்டு குறுவை சாகுபடி அதிக
பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அரசு நேரடி
கொள்முதல் நிலையங்கள் குறைவாக திறக்கப்பட்டுள்ளன.

நிரந்தர கட்டிடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்படும் என
மாவட்ட நிர்வாகம் கூறி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகும்
நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்யப்படும் குறுவை நெல்லை, கொள்முதல்
செய்ய வேண்டிய முழு பொறுப்பு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உள்ளது.


மாவட்டத்திற்கு ஒரு மத்திய கூட்டுறவு வங்கி திறக்கப்பட வேண்டும். தடையின்றி
விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும். தற்போது அறுவடை செய்யப்படும்
குறுவை நெல்லை ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.

எனவே 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லுக்கும் விவசாயிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அப்படிப்பட்ட நெல்லுக்கு அதிகாரிகளே முழு பொறுப்பு” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கூட்டணி வேறு கொள்கை வேறு; கொள்கைபடியே அதிமுக செயல்படும்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Jayapriya

சிதம்பரம் அருகே ராட்சத முதலை பிடிபட்டது!

Gayathri Venkatesan

செஸ் ஒலிம்பியாட்; சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 1 நாள் உள்ளூர் விடுமுறை

Arivazhagan Chinnasamy