பவானிசாகர் வாய்க்காலில் செத்து மிதந்த மீன்கள் – அதிகாரிகள் விசாரணை!

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வாய்க்காலில் மீன்கள் செத்து மிதந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் கீழ்பவானி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து பவானி ஆறு…

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வாய்க்காலில் மீன்கள் செத்து மிதந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் கீழ்பவானி அணை
உள்ளது. இந்த அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ் பவானி வாய்க்கால்
செல்கிறது. இதன்மூலம், விவசாயத்திற்கு மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர்
திறந்து விடப்படும். இந்த நிலையில், பவானிசாகர் கீழ் பவானி அணை நீரேற்று
நிலையம் அருகே, நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசியது .

இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் அணை , மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது . இத்தகவலை அடுத்து , அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து , ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

பவானிசாகர் கீழ்பவானி அணையில் இருந்து வாய்க்காலில் திறந்து விடப்படும்
தண்ணீரில், வெள்ளை கலரில் ரசாயனம் கலந்த வண்ணத்தில் தண்ணீர்
வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த ரசாயனம் கலந்த தண்ணீர் மேட்டுப்பாளையம்
சிறுமுகை பகுதியில் , ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரின் காரணமாக
மீன்கள் இறந்து இருக்குமா என அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.