உசிலம்பட்டி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி 50-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சாலை பாலை ஊற்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.
தமிழ்நாட்டில் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலையை உயர்த்தி வழங்க கோரி பல்வேறு பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த தொட்டப்பநாயக்கணூர் அருகே கிருஷ்ணாபுரம், இடையபட்டி கிராமங்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தேனி – மதுரை நெடுஞ்சாலையில் பாலை சாலை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
—கோ. சிவசங்கரன்







