முக்கியச் செய்திகள் தமிழகம்

16-வது நாளாக தொடர்கிறது புலியை தேடும் பணி

மக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்கும் பணி 16-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4 பேரையும் அடித்துக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர். 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஐம்பதுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், 20-க்கும் மேற்பட்ட அதிரடி படையினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் உட்பட பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, புதர்களில் பதுங்கியிருக்கும் விலங்குகளின் வெப்பநிலை மூலம் அவற்றை கண்டறியும் நவீன கேமரா பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையிலும் புலியை தேடும் பணிகள் தொடர்ந்து வருகிறது.

T23 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆண் புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். கடந்த 15 நாட்களாக புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், 16வது நாளாக புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சமையலறையில் பயன்படுத்தும் ஸ்பூனை ‘இந்தியாவின் தேசிய ஸ்பூன்’ என அறிவிக்க நெட்டிசன்கள் ஆசை

Dinesh A

கணவன் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது குற்றம் என அழைக்க முடியுமா? நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவின் சர்ச்சை பேச்சு

Jeba Arul Robinson

நீட் தேர்வு ஆடை சர்ச்சை விவகாரம்: தேசிய தேர்வுகள் முகமை விளக்கம்!

Web Editor