முக்கியச் செய்திகள் லைப் ஸ்டைல்

ஒரே செடியில் கத்திரிக்காய், தக்காளி: இது எப்படி சாத்தியம் ?

ஒரே செடியில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை விளைவித்து இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் காய்கறி ஆராய்ச்சி பிரிவு புதிய சாதனை படைத்துள்ளது.

இரு தாவரங்களை ஒன்றாக இணைத்து, அதை பயிர் செய்வது மூலம் பல நன்மை கிடைப்பதாக தாவரவியல் ஆய்வுகள் நீருபித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் தாவரங்கள் இணைக்கப்படும் முறையை இன்டர் ஸ்பெசிவிக் கிராப்டிங் என்பார்கள்( inter-specific grafting).இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் காய்கறி ஆராய்ச்சி பிரிவு உத்தரபிரதேசத்தில் உள்ளது. இங்கே உருளைக்கிழங்கும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்தும் அதுபோலவே கத்திரிக்காய் மற்றும் தக்காளி ஒரே செடியில் விளைவித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்றது. இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது. மேலும் இதன் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

எப்படி பயிர் செய்கிறார்கள் ?

25 முதல் 30 நாட்கள் ஆன கத்திரிக்காய் விதைகள் மற்றும் 22 நாள் முதல் 25 நாட்களான தக்காளி விதைகள் ஒன்றிணைக்கப்படுகிறது. இப்படி ஒன்றிணைக்கப்பட்ட விதைகள் 5 முதல் 7 நாட்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட சீதோஷ்ண நிலையில் வளர்க்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்பட்ட விதைகள் மேலும் 5 முதல் 7 நாட்களுக்கு நிழளில் பரமரிக்கப்படுகிறது. இந்த செடிகள் விவசாய களத்திற்கு மீண்டும் மாற்றப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு நிறுத்திவைப்பு

Saravana Kumar

போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: அமித்ஷா ராஜினாமா செய்ய கே.எஸ்.அழகிரி கோரிக்கை

Gayathri Venkatesan

கொரோனா: தமிழ்நாட்டில் இன்று 3,211 பேருக்கு பாதிப்பு

Halley karthi