நடிகர் தனுஷின் 51-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் போஸ்டரை படக்குழு  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ், சமீபத்தில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து…

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் போஸ்டரை படக்குழு  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ், சமீபத்தில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே தற்போது தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இதற்கு ’ராயன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இவர் அடுத்ததாக தன்னுடைய 51வது படத்திற்காக, இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளார். இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகவும் திறமையான மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தனுஷ் மற்றும் சேகர் கம்முலாவின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த D51 படத்தை, சுனில் நாரங் மற்றும் புஸ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பல மொழிகளில், மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க உள்ளார்.

D51 தயாரிப்பாளர்கள் இந்தப்படத்திற்கான கான்செப்ட் போஸ்டர் ஒன்றை தனுஷின் பிறந்தநாளன்று (ஜூலை-28) வெளியிட உள்ளனர். இந்த படத்தில் இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இந்தப்படத்திற்காக மிகப்பொருத்தமான கதையை இயக்குனர் சேகர் கம்முலா தயார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

https://twitter.com/sekharkammula/status/1684538513189109761

மேலும் இந்தப்படத்தில் பங்குபெற உள்ள இன்னும் சில மிகப்பெரிய பிரபலங்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தனுஷின் பிறந்தநாள் என்பதால் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.