முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் பன் பரோட்டோ கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

மதுரையில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்களை தயாரித்த பன் ரோட்டா கடைக்கு உணவுபாதுகாப்புத்துறை சீல் வைத்தனர். 

மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் ஆவின் சந்திப்பில் சாலையோரத்தில் அமைந்துள்ள
பிரபலமான மதுரை பன் புரோட்டோ கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதியில் பெட்டிக்கடைக்கான அனுமதியை
பெற்ற நிலையில் சாலையை ஆக்கிரமித்து உணவகத்தை நடத்தி வந்ததாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி சார்பிலும் நோட்டிஸ் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் அரசு
மருத்துவமனைக்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் மற்றும் நோயாளிகள் சென்றுவரக்கூடிய
போக்குவரத்து சந்திப்பு அருகேயுள்ள சாலையோரத்தில் இந்த கடை செயல்பட்டு வருவதால் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்துவருவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு புகார் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சாலையோரமாக அமைந்துள்ள பிரபல மதுரை பன் புரோட்டோ கடையில் சோதனை நடத்தினர். அப்போது கடையில் சுகாதாரமற்ற முறையில் பரோட்டா உள்ளிட்ட உணவுப்பொருட்களை தயாரித்தது தெரியவந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமற்ற உணவை விற்பனை செய்ததாக கடைக்கு சீல் வைத்து நோட்டிஸ் அளித்தனர். தொடர்ந்து தடையை மீறி விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துசென்றனர்.

மதுரையில் பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த பிரபல பன் புரோட்டா கடையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்காணோர் உண்டு வந்த நிலையில் அங்கு தயாரிக்கப்பட்ட புரோட்டோ உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக கூறி
உணவு பாதுகாப்புத்துறை சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அதிமுக அலுவலகம் சூறையாடல்; ஓபிஎஸ்ஐ எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது”

G SaravanaKumar

தாய், தந்தையை நினைத்து தேம்பி தேம்பி அழுத ராமதாஸ்…சொந்த ஊரில் நிகழ்ந்த நெகிழ்ச்சி…

Web Editor

தமிழக அரசின் மினி ஆம்புலன்ஸ் திட்டம்!

Vandhana