செய்திகள்

நிச்சயமாக கேப்டன் கிளைமாக்ஸில் வருவார்: பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்த் நிச்சயமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள அருள்புரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்று கட்சியினர் தேமுதிகவில் இணையும் இணைப்பு விழா நடைபெற்றது . இதில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிச்சயமாக கேப்டன் கிளைமாக்ஸில் வருவார். பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும், அதிமுக கட்சியின் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கூறி இருக்கக் கூடிய சூழ்நிலையில் நாங்களும் காத்திருக்கிறோம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு தொண்டர்கள் நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு அறிவிக்கப்படும் எனவும் , உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு இது போன்ற பேச்சுக்களை அவர்கள் தவிர்ப்பது நல்லது எனவும் ,நிறைய சாதிக்க வேண்டிய உள்ள சூழ்நிலையில் அவப்பெயரை பெற்று விடக்கூடாது எனவும் தெரிவித்தார் மேலும் பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் போராட்ட உரிமையை பறிக்க கூடாது என பேசினார்.

தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தேமுதிக தனித்து நின்றாலும் கூட்டணியில் இருந்தாலும் தேமுதிக தனது இலக்கை அடையும் எனவும் , விரைவில் கோட்டையில் தேமுதிக கொடி ஏற்றும் கேப்டன் முதல்வராக வருவார் என பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஏற்காட்டில் கோடை விழா: சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

Halley Karthik

அதிமுக ஆட்சியில் கஜானா தூர்வாரப்பட்டுள்ளது: டிடிவி தினகரன்

எல்.ரேணுகாதேவி

உலக தலைவர்களாக வலம் வரும் இந்திய வம்சாவளியினர்

Web Editor

Leave a Reply