ஒடிசா ரயில் விபத்து உயிரிழந்தவர்களுக்கு நியூஸ் 7 தமிழ் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு ”ஒரு நிமிட மௌன அஞ்சலி” செலுத்தப்பட உள்ளது.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் இன்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்து வகையில் நியூஸ் 7 தமிழ் சார்பாக இன்று மாலை 6 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த மௌன அஞ்சலியில் பங்கெடுக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தலாம்.