25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நிகழ்ந்தது எப்படி?- உயிர் தப்பி சென்னை திரும்பியவர்கள் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ்  விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது குறித்து அந்த ரயிலில் பயணித்து உயிர் தப்பியவர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி
நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின், பாலசோர்
அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விபத்தில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகிலுள்ள மற்றொரு
தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அடுத்த சில நிமிடங்களில் அதே வழியில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உடனடியாக உள்ளூர் மக்கள் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீட்பு பணியில் தேசிய, மாநில மீட்பு படையினருடன் விமானப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

விடிய விடிய நடந்த இந்த மீட்பு பணியில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்துகுள்ளான ரயில் வண்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 100 பேர் வரை பயணம் செய்ததாகவும்,இதில் 30 பேர் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்து உயிர் தப்பிய 3 பேர், விமானம் மூலம் சென்னை திரும்பினர். சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த நாகேந்திரன், நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி கூறியதாவது:

கோரமண்டல் ரயில் வண்டியில் பி8 பெட்டியில் பயணித்திருந்தோம், எனக்கு முன்னால் இருந்த பெட்டிகள் தடம் புரண்டு பெரிய விபத்து ஏற்பட்டது. ஆனால் நான் இருந்த பெட்டியில், பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை. ரயில் வண்டி குலுங்க மட்டுமே செய்தது. விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை இருந்ததால் அங்கிருந்து நடந்து வந்து பேருந்து மூலம் புவனேஸ்வர் அடைந்தோம்.  பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தோம். தமிழ்நாடு அரசு சார்பிலும் ரயில்வே நிர்வாகம் சார்பிலும் தொலைபேசி மூலமாக தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருந்ததாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நாகேந்திரன் என்பவர் கூறியதாவது:

கடவுள் கொடுத்த மறு வாய்ப்பாக இதை பார்க்கிறேன். விபத்தில் சிக்கியவர்களுக்கு உள்ளூர் மக்கள் பெரும் உதவியாக இருந்தார்கள். மீட்பு குழுவினர் வருவதற்கு முன்பாகவே உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரசு உதவி இல்லாமல் தாங்களாகவே சென்னை வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எங்க பாத்தாலும் டெட்பாடியும், ரத்தமும்தான்-Coramandel இரயில் விபத்தில் உயிர்பிழைத்த தமிழர்கள் பேட்டி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

2வது டி20 போட்டி; இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலபரீட்சை

G SaravanaKumar

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்; பாராட்டிய ரஜினிகாந்த்

EZHILARASAN D

பிரபல தயாரிப்பாளரிடமிருந்து பாலியல் தொந்தரவு: அனு இமானுவேல் பரபரப்பு தகவல்..!

Web Editor