ஒடிசாவில் இருந்து மேலும் 17 பேர் சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வருகை!

ஒடிசாவில் இருந்து இரண்டாவது சிறப்பு மூலம் 17 பேர் தமிழ்நாடு அழைத்துவரப்பட்டனர்.  ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை அழைத்து வரும் பணியில்…

ஒடிசாவில் இருந்து இரண்டாவது சிறப்பு மூலம் 17 பேர் தமிழ்நாடு அழைத்துவரப்பட்டனர். 

ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை அழைத்து வரும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. 131 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், நேற்று சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வந்தடைந்தனர்.

தற்போது இரண்டாவது சிறப்பு ரயில் மூலம் மீட்கப்பட்ட 17 பேர் தமிழகம்
அழைத்து வரப்பட்டுள்ளனர். நேற்று மதியம் 1:30 மணிக்கு ஒடிசாவின் பாத்ராக் ரயில்
நிலையத்தில் புறப்பட்ட சிறப்பு ரயில் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

பயணிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு காவல்துறையும், ராஜீவ்
காந்தி பொது மருத்துவமனை மருத்துவ குழுவும் சாய்வு நாற்காலி, முதலுதவி பெட்டி, மருந்து பொருட்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.

பிற்பகல் 12 :45 மணி அளவில் சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்
நிலையத்தில் உள்ள நடைமேடை ஒன்றிற்கு வந்தடைந்தது. அவர்களை உறவினர்கள்,
நண்பர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

பின்னர் காவல்துறை துணை ஆணையர் ஸ்ரேயா மற்றும் வருவாய் துறை அலுவலர் ரங்கராஜன், கூட்டாக பேட்டியளித்தனர். சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது அழைத்து வரப்பட்ட 17 பேரில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.