GOLD RATE | தங்கம் விலை சற்று உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,370-க்கும், சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.1,14,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி சென்னையில் வெள்ளி ஒருகிராம் ரூ.260-க்கும், ஒருகிலோ ரூஉ.260,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கட்நத சில தினங்களாக படிப்படியாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,385-க்கும். சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,15,080-க்கும் விற்பனை செய்யபடுகிறது. தங்கத்தின் விலை உயந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் வெள்ளி ஒருகிராம் ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், ஒருகிலோ ரூ.5,000 குறந்து ரூ.255,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.