இன்றைய சூழலில் கொரோனவுக்கு எதிராக போர் வீரர்கள் போல் போலீசார் செயல்படுகின்றனர் என சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பில் இருந்த மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, ஆயுதப்படை ஏடிஜிபி இருந்து வந்த சங்கர் ஜிவாலை சென்னை பெருநகர காவல் ஆணையராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சென்னை பெருநகத்தின் 108 வது காவல் ஆணையராக சங்கர் ஜிவால் இன்று பொறுப்பேற்றார். அவரிடம் சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் ஊரடங்கு விதிமுறைகளை கனிவோடு அமல்படுத்துவோம். சென்னையில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.







