தலைமறைவான கட்டடத் தொழிலாளி; கண்டுபிடித்த சுகாதாரத்துறையினர்!

சேலம் அருகே கொரோனா தொற்று உறுதியானதால் தலைமறைவான கட்டட தொழிலாளியை, சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி ஊராட்சி பழைய சினிமா கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கட்டிட…

சேலம் அருகே கொரோனா தொற்று உறுதியானதால் தலைமறைவான கட்டட தொழிலாளியை, சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி ஊராட்சி பழைய சினிமா கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திடீரென தலைமறைவானார். பின்னர், அவரை கண்டுபிடித்த சுகாதாரத்துறையினர் சிகிச்சைகாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் அக்கம் பக்கத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கட்டட தொழிலாளியின் குடும்பம் வசித்த பகுதி, கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, கட்டட தொழிலாளி தலைமறைவாக இருந்தபோது, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.