திமுக எம்எல்ஏக்கு ஆபாச வீடியோ… மிரட்டி பணம் பறித்த ஆசாமி ராஜஸ்தானில் கைது!

பெரியகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணகுமாருக்கு வீடியோ கால் மூலம் பேசி ஆபாச வீடியோ அனுப்பி ரூ.10,000 பறித்தவரை தேனி சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தானில் அதிரடியாக கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம்…

பெரியகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணகுமாருக்கு வீடியோ கால் மூலம் பேசி ஆபாச வீடியோ அனுப்பி ரூ.10,000 பறித்தவரை தேனி சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தானில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சரவணகுமார். 48 வயதான இவர் குடும்பத்துடன் பாரதி நகரில் வாசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு வீடியோ கால் வந்ததுள்ளது. அதனை எடுத்து பேசிய சரவணக்குமாரிடம், எதிர்முனையில் இருந்து யாரும் பேசவில்லை. அதன் பிறகு சில மணி நேரங்கள் கழித்து வீடியோ கால் பதிவு செய்து அதில் ஆபாச முறையில் பேசுவது போன்ற தவறான வீடியோ அவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் அனுப்பி இருந்தார்.

அதற்கு பிறகு சரவண குமாரிடம் பேசிய அந்த மர்ம நபர், நான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் விட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரவணகுமார் அந்த நபருக்கு வங்கி கணக்கு மூலம் ரூ.10 ஆயிரம் பணம் அனுப்பி உள்ளார்.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினரான சரவணகுமார் தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், சரவணகுமாரிடம் செல்போனில் பேசிய அந்த மர்ம நபரின் மொபைல் நம்பர் மற்றும் பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து சரவணகுமாரிடம் மிரட்டி ரூ.10 ஆயிரம் பணம் பறித்த அந்த நபர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற ஊரை அடுத்த கோவிந்த்கர்க் பகுதியில் வசித்து வரும் அர்ஷத் என தெரிய வந்தது. பிறகு ராஜஸ்தான் மாநிலம் விரைந்த தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அங்கு வைத்து அர்ஷத்தை கைது செய்தனர். தற்போது அவரை தமிழ்நாடு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.