முக்கியச் செய்திகள் தமிழகம்

‘அக்னிபாத்’ – கோவையில் மாணவர் அமைப்பினர் ரயில் மறியல்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17.5 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபாத் (அக்னிபாதை) என்றும் பெயரிடப்பட்டது. ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்தார். சூழல் இவ்வாறு இருக்க, அக்னிபாத் திட்டம் தேசத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடற்படை தளபதி ஹரி குமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்

இந்த சூழலில் தமிழ்நாட்டில் சென்னையிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இருதினங்களுக்கு முன்னர் சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள போர் நினைவு சின்னம் அருகில், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், இத்திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டுமென காவல்துறையினர் எச்சரித்தும் அவர்கள் கலைந்து செல்லாத நிலையில், காவல்துறையினர் கைது நடவடிக்கையில் இறங்கினர்.

இதனையடுத்து இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயிலை மறித்து ரயில் பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரயிர்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் கோவை மாநகர போலீசார் கைது செய்ய முயன்றனர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்ட 54 இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். மேலும் இந்த போராட்டத்தின் போது அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய இந்திய மாணவர்கள் சங்கத்தினர், இந்த திட்டத்தை அமல்படுத்தினால் இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கையில் பதவியேற்ற புதிய அமைச்சர்கள்

Arivazhagan CM

சீன தாக்குதலில் இருந்து தைவானை பாதுகாப்போம்: ஜோ பைடன்

Mohan Dass

கொரோனா பாதிப்பு 3 கோடியை கடந்தது

Gayathri Venkatesan