வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று வேகமாக பரவுகிறது. தமிழ்நாட்டிலும் இந்த தொற்று பரவ தொடங்கியுள்ளது. இப்போது வரை, ஒமிக்ரான் தொற்றுக்கு 34 பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்ற கூறப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணியளவில் இந்த கூட்டம் தொடங்க இருக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உட்பட பல அதிகாரிகள் இதில் பங்கேற்கின் றனர்.
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய புதிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.








