நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு எலும்பு முறிவு

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர். இவர் இப்போது, ராஜமவுலி இயக்கும் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்ஆர்ஆர்)…

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர். இவர் இப்போது, ராஜமவுலி இயக்கும் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்ஆர்ஆர்) படத்தில் நடித்துள்ளார். அவருடன் ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா உள்பட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

ஜனவரி மாதம் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ள இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் நவ.1ஆம் தேதியன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை அடுத்து, கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது கைவிரலில் படுகாயமடைந் தார். அதில் அவர் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதற்கிடைய தனது மகன்களுடன் அவர் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.