இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு 3,43,21,025 லிருந்து 3,43,33,754 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12,165 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,37,12,794 லிருந்து 3,37,24,959 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,48,922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 221 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,59,652 லிருந்து 4,59,873 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடந்தோர் விகிதம் 98.23% உயிரிழப்பு விகிதம் 1.34% ஆக உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 5,65,278 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 107.70 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.







