முக்கியச் செய்திகள் இந்தியா

கேரளாவில் ‘போதைப் பொருள் ஜிகாத்’: பேராயர் பரபரப்பு பேச்சு

கேரளாவில் போதைப் பொருள் மூலம் கிறிஸ்தவப் பெண்களை மதம் மாற்ற முயற்சிப் பதாக கத்தோலிக்க பேராயா் ஜோசஃப் கள்ளரங்காட்டு குற்றம்சாட்டி இருப்பது பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோட்டயம் மாவட்டம் குறுவிலங்காடு (Kuravilangad) தேவாலயத்தில் புதன்கிழமை நடை பெற்ற நிகழ்ச்சியில் பேராயரான ஜோசஃப் கள்ளரங்காட்டு பேசும்போது, கேரளாவில் பிற மதத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிவைத்து லவ் ஜிகாத் நடைபெறுகிறது. காதலிப் பதாகக் கூறி ஏமாற்றி திருமணம் செய்து மதமாற்றம் செய்வது, போதைப்பொருள் பயன் படுத்த பழக்கப்படுத்துவது உள்ளிட்டவற்றை சிலா் மேற்கொள்வதாகக் கூறினார்.

அதோடு மட்டுமல்லாமல், பயங்கரவாத செயல்களுக்கும் நமது பெண்களைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்த அவர், இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நிமிஷா, சோனியா செபாஸ்டியன் என்ற பெண்கள், பாத்திமாவாகவும் அயிஷாவாகவும் மதமாற்றம் செய்யப்பட்டு ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாமில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதைக் குறிப்பிட்ட அவர், இங்கு காதல் என்ற பெயரில் மூளைச் சலவை செய்யப்பட்ட கிறிஸ்தவ மற்றும் இந்து மத பெண்கள், மதமாற்றத்துக்குப் பின் ஆப்கானிஸ்தானில் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் இது கவலையளிக்கும் பிரச்னை என்றும் கூறிய அவர், அதுபோன்ற பயங்கரவாத முகாம்களுக்கு நம் பெண்களை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்பது தெரியவில்லை எனவும் கூறினார்.

ஜிகாதி பயங்கரவாதிகள், பிற மத இளைஞர்களை போதைக்கு அடிமையாக்குவதை ஓர் உத்தியாக கையாள்கின்றனர் என்றும் அவர் சொன்னார். பேராயரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

மாட்டுச் சாணம் கொண்டு தயாரான பெயிண்ட் – ரூ.30,000 கூடுதல் வருமானம்

Jayapriya

மகாராஷ்டிராவில் சுற்றுலா தலமாக மாறும் சிறைச்சாலைகள்!

Jayapriya

ஸ்டேன் சாமி உயிரிழப்பு; மத்திய அரசைக் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

Halley karthi