முக்கியச் செய்திகள் தமிழகம் வணிகம்

சென்னை கார் தொழிற்சாலையை மூடுகிறது ஃபோர்டு: 4000 தொழிலாளர்கள் பாதிப்பு

கடும் வர்த்தகப் பாதிப்பில் சிக்கி இருக்கும் ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் இருக்கும் இரு கார் தொழிற்சாலைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் ஃபோர்டு. இந்நிறு வனம் உலகம் முழுவதும் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவுகளை வைத்துள்ளது. இந்தியாவிலும் இந்த நிறுவனம் தொழிற்சாலைகளை நிறுவி இருக்கிறது. ஆஸ்பயர், ஈக்கோஸ்போர்ட், ஃபிகோ உட்பட பல்வேறு கார்களை தயாரித்து விற்கும் இந்நிறுவனம் கடுமையான நஷ்டம் மற்றும் வளர்ச்சி இல்லாத காரணத்தால் இந்தியாவில் இருக்கும் ஒரு தொழிற்சாலைகளையும் மூட திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையும், குஜராத்தில் சனண்ட் (Sanand) பகுதியில் இருக்கும் தொழிற்சாலையிலும் கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.

சனாண்ட் ஆலையில் 2021 நான்காம் காலாண்டில் இருந்தும் சென்னை ஆலையில் 2022 இரண்டாவது காலாண்டில் இருந்தும் கார்கள் தயாரிக்கும் பணிகள் முற்றிலும் நிறுத்தப் படும். அதே நேரம், சர்வதேச அளவில் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்காக, ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத் து பங்குதாரர்களுடன் இணைந்து நியாயமான தீர்வைத் திட்டமிடுவதாகவும் அந்நிறு வனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

Ezhilarasan

மேகதாது: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கும் அனைத்துக் கட்சி குழு

Ezhilarasan

கீழடி அருங்காட்சியக பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு